< Back
மாநில செய்திகள்
முன்விரோதம் காரணமாக 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு - 2 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

முன்விரோதம் காரணமாக 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு - 2 பேர் கைது

தினத்தந்தி
|
18 Aug 2023 12:49 PM IST

காசிமேடு,

சென்னை காசிமேடு புதுமனைக்குப்பம் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 35). வெல்டர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென அருகில் நிறுத்தி இருந்த மேலும் 2 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவுக்கும் பரவியது.

உடனடியாக பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் 3 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. ஆட்டோவும் சேதம் அடைந்தது. இது குறித்த புகாரின்பேரில் காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த அஜித்குமார் (23), கார்த்தி (25) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகன் இதற்கு முன்பு சிங்காரவேலன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும், அஜித்குமார், கார்த்தி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த முன்ரோதம் காரணமாக முருகனை பழிவாங்கும் நோக்கில் முருகனின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததும், தீ மளமளவென அருகில் இருந்த மேலும் 2 மோட்டார்சைக்கிள்கள், ஆட்டோவுக்கு பரவியதும் தெரிந்தது. இதையடுத்து அஜித்குமார், கார்த்தி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்