< Back
மாநில செய்திகள்
மாயமான வாலிபரை கொன்று கிணற்றில் வீசிய வழக்கில் மேலும் 3 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

மாயமான வாலிபரை கொன்று கிணற்றில் வீசிய வழக்கில் மேலும் 3 பேர் கைது

தினத்தந்தி
|
27 Aug 2022 2:35 PM IST

மாயமான வாலிபரை கொன்று கிணற்றில் வீசிய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள எருமையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). அவரது தாய் கடந்த மே மாதம் மறைமலைநகர் போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்த நிலையில் மாயமான பிரகாஷை வெட்டிக்கொன்று திருமுடிவாக்கம் அருகே உள்ள ஒரு கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனைடுத்து பிரகாஷை வெட்டி கொலை செய்த வழக்கில் நேற்று முன்தினம் திருமுடிவாக்கத்தை சேர்ந்த மோசஸ் (20), தமிழ்மணி (23) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.

இந்த நிலையில் பிரகாஷ் கொலை வழக்கில் மண்ணிவாக்கத்தை சேர்ந்த கட்டிங் சிவா என்கிற சிவா (22), திருமுடிவாக்கத்தை சேர்ந்த கருப்பு என்கிற தமிழ் அழகு (24), சூரியா என்கிற சூரியன்(20) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரை மறைமலைநகர் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்