திருவாரூர்
மதுவிற்ற 3 பேர் கைது
|மதுவிற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வலங்கைமான் அருகே தொழுவூர் நடுத்தெரு பகுதியில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்ற ஜீவா (வயது47), ராம்கி (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தல 110 லிட்டர் வீதம் 220 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதே போன்று திருகருக்காவூர் அருகே மாளிகை திடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாபநாசம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (41) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் மோட்டார் சைக்கிளில், மது பாட்டில்களை மறைத்து வைத்து, விற்பதற்காக கொண்டு சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்து, மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.