< Back
மாநில செய்திகள்
3 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
சேலம்
மாநில செய்திகள்

3 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
3 March 2023 1:00 AM IST

சூரமங்கலம்:-

சேலம் கந்தம்பட்டியில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெள்ளி தொழிலாளி

சேலம் கந்தம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42). இவர் சிவதாபுரம் பகுதியில் உள்ள வெள்ளி பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மூர்த்தி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சங்கர் என்பவரது வீட்டில் ரூ.20 ஆயிரமும், நகைக்கடை ஊழியரான பூவிழி என்பவரது வீட்டில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி கொலுசும் திருட்டு போனது.

போலீசார் விசாரணை

இந்த திருட்டுகள் தொடர்பாக சூரமங்கலம் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்