< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தில் 3 ஏரிகள் நிரம்பின
சேலம்
மாநில செய்திகள்

மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தில் 3 ஏரிகள் நிரம்பின

தினத்தந்தி
|
21 July 2022 12:09 AM IST

மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தில் எம்.காளிப்பட்டி ஏரி உள்பட 3 ஏரிகள் நிரம்பின.

மேச்சேரி:-

மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தில் எம்.காளிப்பட்டி ஏரி உள்பட 3 ஏரிகள் நிரம்பின.

உபரிநீர் திட்டம்

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. உபரிநீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த ஏரி நிரம்பியவுடன், ராயப்பன் ஏரிக்கும், பின்பு சின்னேரிக்கும் காவிரி உபரிநீர் சென்றது. அந்த ஏரிகளும் நிரம்பின. மொத்தம் 3 ஏரிகள் நிரம்பிய நிலையில், சின்னேரியில் இருந்து உபரிநீர், மானத்தாள் ஏரிக்கு செல்கிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த ஏரிகள் நிரம்பியதையடுத்து பொதுமக்கள் திரளாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த ஏரி நிரம்பியதால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஏரி நிரம்பியதன் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளின் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

மேலும் செய்திகள்