< Back
மாநில செய்திகள்
காரைக்குடி அருகே மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...!
மாநில செய்திகள்

காரைக்குடி அருகே மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...!

தினத்தந்தி
|
9 Oct 2022 4:51 PM IST

காரைக்குடி அருகே மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாலையோர மின்கம்பத்தில் வேன் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் வேனின் இடிபாடுக்குள் சிக்சி 3 பேர் உயிரிழந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்