< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

தினத்தந்தி
|
23 Feb 2024 2:55 PM IST

புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில் இன்று மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,

1) தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் மகேஷிற்கு கூடுதலாக தீவிரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

2) சென்னை சி.ஐ.டி. எஸ்.பியாக பணியாற்றி வந்த அருளரசுக்கு கூடுதலாக தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமை அலுவலக எஸ்.பி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

3) கோயம்புத்தூர் தீவிரவாத தடுப்பு எஸ்பியாக பணியாற்றி வந்த சசிமோகனுக்கு கூடுதலாக மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்