< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது பொக்லைன் எந்திரம் மோதி 3 பேர் காயம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பொக்லைன் எந்திரம் மோதி 3 பேர் காயம்

தினத்தந்தி
|
16 Jun 2022 7:01 PM IST

நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது பொக்லைன் எந்திரம் மோதி 3 பேர் காயம் அடைந்தனர்.


நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை கல்நார்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் அரவிந்தன் (வயது 23) மற்றும் இவரது நண்பர்கள் தாமலேரிமுத்ததர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (19), முத்தாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (19) ஆகிய மூன்று பேரும் புதுப்பேட்டை பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். புதுப்பேட்டை அருகே கிழக்குமேடு என்ற பகுதியில் சென்றபோது எதிரே வந்த பொக்லைன் எந்திரம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அரவிந்தன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்