< Back
மாநில செய்திகள்
வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி

தினத்தந்தி
|
4 March 2023 1:25 AM IST

வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலியானது.

கீரமங்கலம் தெற்கு பகுதியை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 47). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் தனது ஆடுகளை அங்குள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வீரம்மாள் அங்கு சென்று பார்த்த போது வெறி நாய் ஒன்று 3 ஆடுகளை கடித்து கொன்று இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட வீரம்மாள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கீரமங்கலம், கொடிக்கரம்பை, ஆலடிக்கொல்லை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளது. எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்