< Back
மாநில செய்திகள்
3 படம் ரீரிலீஸ் : ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
மாநில செய்திகள்

'3' படம் ரீரிலீஸ் : ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

தினத்தந்தி
|
4 Dec 2023 4:15 AM IST

'3' படத்தின் மூலம்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

சென்னை,

தனுஷ் நடித்து 2012-ல் வெளியான படம் '3'. இந்த படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். இதில் தனுஷ் ஜோடியாக சுருதிஹாசன் நடித்து இருந்தார்.

இந்த படத்தின் மூலம்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். 3 படத்தை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூல் பார்த்து வருகிறது. புதிய படங்களுக்கு இணையாக '3' படத்துக்கு வரவேற்பு கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "3 படத்தின் மறு வெளியீட்டுக்கு கிடைத்துள்ள வரவேற்பு எமோஷனலாக இருக்கிறது. இந்த வரவேற்புக்கு கோடானு கோடி நன்றி'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்