ராணிப்பேட்டை
3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 நாட்களுக்கு சென்னை-காட்பாடி இடையே பகுதியாக ரத்து
|3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 நாட்களுக்கு சென்னை-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணம்
அரக்கோணம் யார்டில் காலை 9.45 மணியில் இருந்து மதியம் 1.45 மணி பராமரிப்புப் பணிகள் நடப்பதால் செவ்வாய்க்கிழமை, (தன்கிழமை என 2 நாட்கள் சென்னை-காட்பாடி இடையே 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது, என ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
வண்டி எண்:12609 சென்னை-பெங்களூரு லால் பாக் எக்ஸ், வண்டி எண்:12679 சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், வண்டி எண்:12607 சென்னை-மைசூரு என 3 ரெயில்கள் சென்னை சென்ட்ரல்-காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
வண்டி எண்:16054 திருப்பதி-சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ், வண்டி எண்:16053 சென்னை சென்ட்ரல்-திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை என 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
வண்டி எண்:12296 தானாபூர்-பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) என 2 நாட்கள் மட்டும் கூடூர், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக செல்லும். இந்த ரெயில் திருத்தணி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.