< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
வனப்பகுதியில் 3 யானைகள் முகாம்
|17 Aug 2022 12:43 AM IST
சிகரலப்பள்ளி வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டு உள்ளன.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரலப்பள்ளி மற்றும் எப்ரி வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வளப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவில் தோட்டத்தில் தங்க வேண்டாம். பகல் நேரங்களில் ஆடு, மாடுகளை மேய்க்க வனப்பகுதிக்கு செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.