< Back
மாநில செய்திகள்
மடிப்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு உள்பட 3 நாய்கள் பலி

கோப்புப்படம்: 

மாநில செய்திகள்

மடிப்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு உள்பட 3 நாய்கள் பலி

தினத்தந்தி
|
11 Dec 2022 12:21 AM IST

மடிப்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு உள்பட 3 நாய்கள் பலியாகின.

சென்னை,

வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயலின் வேகம் அதிகாலை 4 மணி வரை நீடித்தது. இதனால் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருந்தது.

'மாண்டஸ்' புயலால் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சென்னையை அடுத்த மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 4-வது குறுக்கு தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. காற்றின் வேகத்தால் அந்த பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.

இதில் பசு மாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் துடிதுடித்து செத்தது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் உடனடியாக அந்த பகுதிக்கு செல்லும் மின்சாரத்தை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். பின்னர் அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்து சென்றனர்.

மின்வாரிய ஊழியர்கள் சென்ற அரை மணி நேரத்தில் மீண்டும் அந்த மின்கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்த 3 தெரு நாய்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

மேலும் செய்திகள்