< Back
மாநில செய்திகள்
மூர்மார்க்கெட்-ஆவடி இடையே 3 நாட்கள் இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து
மாநில செய்திகள்

மூர்மார்க்கெட்-ஆவடி இடையே 3 நாட்கள் இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து

தினத்தந்தி
|
14 Oct 2023 4:07 AM IST

பராமரிப்பு பணி காரணமாக மூர்மார்க்கெட்-ஆவடி இடையே 3 நாட்கள் இரவு நேர மின்சார ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

சென்னை,

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற 16-ந்தேதி மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடிக்கு இரவு 11.30, 11.45 மணிக்கு புறப்படும் ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல இன்று (சனிக்கிழமை), 17-ந்தேதி மூர்மார்க்்கெட்டில் இருந்து ஆவடிக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

மின்சார ரெயில்

சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், வரும் 17-ந்தேதி சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 5.20, 7.45 மணிக்கு ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

ஆவடியில் இருந்து காலை 4.45, 6.40 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்களும், மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 9.15 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

வருகிற 17-ந்தேதி மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.30, 8.35, 10.15 மணிக்கு ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் எழவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, அரக்கோணத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு ஆந்திர மாநிலம் கடப்பா செல்லும் மின்சார ரெயில், காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் மின்சார ரெயில், காட்பாடியில் இருந்து காலை 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மின்சார ரெயில் வரும் 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்