மதுரை
திருப்பரங்குன்றம் தாலுகாவில் 3 நாட்கள் ஜமாபந்தி
|திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி வருகின்ற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் கலெக்டர் அனிஷ்சேகர் தலைமையில் நடக்கிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி வருகின்ற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் கலெக்டர் அனிஷ்சேகர் தலைமையில் நடக்கிறது.
ஜமாபந்தி
மதுரை மாவட்டத்தில் 11 தாலுகாக்கள் உள்ளன. அதில் வருகின்ற 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 665 கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடக்கிறது. இதில் அந்த, அந்த தாலுகாக்களுக்கு உட்பட்டு பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை பெறுவது உள்பட மனுக்கள் கொடுக்கலாம். அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
இதில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் வருகின்ற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று திருப்பரங்குன்றம், நிலையூர் 2 பிட் -குரூப், வாலனேந்தல் குரூப், புதுக்குளம் - 3 பிட் -குரூப், சூரக்குளம்- குரூப், தோப்பூர், கோ.புதுப்பட்டி (எ) ஆஸ்டின்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
இதனையடுத்து 2-ம் நாளாக 10-ந்தேதி (புதன்கிழமை) அன்று தனக்கன்குளம், தென்பழஞ்சி - குரூப், சாக்கிலிப்பட்டி- குரூப், மேலநெடுங்குளம் நிலையூர்-1 பிட், வேடர்புளியங்குளம் குரூப், மாடக்குளம் குரூப், புதுக்குளம் 2 பிட் - குரூப் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
வலையங்குளம் உட்கோட்டம்
இதனை தொடர்ந்து 3-ம் நாளாக 11-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று வலையங்குளம் உட்வட்டத்தை சேர்ந்த எலியார்பத்தி-குரூப், பாரபத்தி -குரூப், பெரிய கூடக்கோவில் - குரூப், கொம்பாடி, நெடுமதுரை, ஒத்த ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், தொட்டியபட்டி, வலையப்பட்டி, முல்லாகுளம், பெருங்குடி, வலையங்குளம் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
கலெக்டர் அனிஷ்சேகர்
ஒவ்வொரு தாலுகாவிற்கும், குறிப்பிட்ட கிராமங்கள் வாரியாக 3 நாளிலும் பட்டா மாறுதல் குறித்து நேரடியாக மனு கொடுக்கலாம். அதற்கு தீர்வு காணப்படும். தாலுகா வாரியாக மனுக்கள் பெறுவதற்கு தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தாலுகாவை பொறுத்தவரை கலெக்டர் அனிஷ்சேகர் நேரடியாக மக்களிடம் மனுக்கள் பெற்று தீர்வு காணுகிறார். இதனையொட்டி தற்போதே முழுவீச்சில் ஜமாபந்தி பணிகள் நடந்து வருகிறது. ஜமாபந்தி ஏற்பாடுகளை திருப்பரங்குன்றம் தாலுகா தாசில்தார் அனீஷ் சத்தார் செய்து வருகிறார்.
மதுரை மேற்கு தாலுகா
மதுரை மேற்கு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையிலும், தாசில்தார் நாகராஜன் முன்னிலையிலுமாக 3 நாட்கள் ஜமாபந்தி நடக்கிறது. அதில் முதல் நாளாக வருகின்ற (9-ந்தேதி) கொடிமங்கலம், மேலமாத்தூர்- குரூப், கீழ்மதி காட்டினான் - குரூப், துவரிமான், கீழமாத்தூர், மேலக்குயில்குடி, கீழக்குயில்குடியும், 2-ம் நாளாக (10-ந்தேதி) தட்டானூர், விளாச்சேரி, வடிவேல் கரை- குரூப், புதுக்குளம் 1-வது பிட் குரூப், சம்பக்குடி, வடபழஞ்சிகுரூப், கரடிப்பட்டியும், 3-ம் நாளாக (11-ந்தேதி) அச்சம்பத்து - குரூப், ஏற்குடி - குரூப், கோச்சடை - குரூப், ஆரப்பாளையம் - குரூப், கொக்குளப்பி - குரூப், மேல் மதுரை ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது.