< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
3 நாட்கள் தொடர்விடுமுறை - சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
|12 Aug 2022 5:40 PM IST
சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்றும், நாளையும் 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனிடையே நாளை மற்றும் நாளை மறுநாள் வார இறுதி விடுமுறை என்பதால், அடுத்த 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் பணியாற்றும் பிற ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அவ்வாறு சென்னையில் பிற ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்காக போதுமான பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.