< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நந்தனம் அரசு கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் 'சென்னை திருவிழா' - இன்று தொடக்கம்
|19 Aug 2022 10:58 PM IST
இன்று முதல் 21-ந்தேதி வரை ‘சென்னை திருவிழா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறுகின்றன.
சென்னை,
சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் 3 நாட்களுக்கு சென்னை திருவிழா நடைபெறுகிறது. தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் இன்று தொடங்கி வரும் 21-ந்தேதி வரை 'சென்னை திருவிழா' என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறுகின்றன.
சென்னை தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உணவு கண்காட்சி, வேலைவாய்ப்பு முகாம், மருத்துவ முகாம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், சிறுவர்களைக் கவரும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.