< Back
மாநில செய்திகள்
இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நிறைவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நிறைவு

தினத்தந்தி
|
28 Aug 2023 12:00 AM IST

இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் உள்ள இளம் செஞ்சிலுவை சங்கத்தின் (ஜூனியர் ரெட் கிராஸ்) மாணவ-மாணவிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 25-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. பயிற்சி நிறைவு முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட கிளை கவுரவ செயலாளர் ஜெயராமன் பயிற்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அமைப்பாளரும், பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியருமான ராதாகிருஷ்ணன் முகாம் பற்றிய கருத்துரை வழங்கினார். பேராசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு உடற்பயிற்சி மற்றும் யோகாவின் அவசியம் குறித்தும், மாவட்ட நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன், போக்குவரத்து விதிகள் பற்றியும், மாநில கருத்தாளர் விஜய பிரசாத் பேரிடர் மேலாண்மை குறித்தும் பயிற்சி அளித்தனர்.

மேலும் செய்திகள்