< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ படிப்புக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பம்
|31 May 2024 6:24 PM IST
ஜூன் 03 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
2024 - 25ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூன் 03-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.