< Back
மாநில செய்திகள்
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3 கோடி வீடுகள் அபகரிப்பு - தாய்-மகன் கைது
சென்னை
மாநில செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3 கோடி வீடுகள் அபகரிப்பு - தாய்-மகன் கைது

தினத்தந்தி
|
30 July 2023 11:16 AM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 கோடி மதிப்பிலான வீடுகளை அபகரித்த தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் பி.எஸ்.கே. தெருவைச் சேர்ந்த சகோதரிகளான லட்சுமி பாய், பத்மா பாய் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.

அதில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் தெருவில் எங்களுக்கு சொந்தமாக தலா 1,083 சதுரடியில் 2 வீடுகள் உள்ளன. ரூ.3 கோடி மதிப்பிலான இந்த வீடுகளை அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (வயது 49), அவருடைய மகன் அன்பு (27) மற்றும் சுசீலா என்ற பெண் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துவிட்டனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்களுடைய வீடுகளை மீட்டு தரவேண்டும்' என்று கூறி இருந்தனர்.

இந்த புகார் மீது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜாபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஷ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் கலைச்செல்வி, அவரது மகன் அன்பு ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்