< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
க.பரமத்தி ஒன்றிய பகுதியில் ரூ.3½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
|12 Aug 2023 12:07 AM IST
க.பரமத்தி ஒன்றிய பகுதியில் ரூ.3½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
க.பரமத்தி ஒன்றியம் ராஜபுரம், தொக்குப்பட்டி, சூடாமணி, எலவனூர், நஞ்சைகாள குறிச்சி, அணைப்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகளிலும் மொத்தம் ரூ.3 கோடியே 80 லட்சத்தில் தார் சாலை, புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், ரேஷன் கடை, சமுதாயக் கூடம் ஆகிய கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ கலந்து கொண்டு மேற்கண்ட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் கருணாநிதி, தமிழ்ச்செல்வி கருப்புசாமி, நல்லுசாமி, எலவனூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநீலகண்டன், கிருஷ்ணமூர்த்தி (ஊராட்சிகள்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.