< Back
மாநில செய்திகள்
ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

தினத்தந்தி
|
5 Oct 2023 12:30 AM IST

எட்டயபுரம் பேரூராட்சியில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

எட்டயபுரம்:

எட்டயபுரம் பேரூராட்சியில் ரூ.3 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் தார் சாலை அமைத்தல், பேவர் பிளாக் சாலை அமைத்தல் மற்றும் பேரூராட்சி பொது நிதியில் கட்டப்பட்ட மன்ற கூட்ட அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ.7 லட்சத்தில் பயணியர் நிழற்குடை, பேரூராட்சி பொது நிதி திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மன்ற கூட்ட அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், 3-வது வார்டு பகுதியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை, 15-வது நிதி குழு மானியத் திட்டத்தில் 3-வது வார்டு பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி துணை தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்