< Back
மாநில செய்திகள்
மதுரையில் இருந்து சென்னைக்கு அடுத்தடுத்து 3 விமானங்கள் ரத்து
மாநில செய்திகள்

மதுரையில் இருந்து சென்னைக்கு அடுத்தடுத்து 3 விமானங்கள் ரத்து

தினத்தந்தி
|
20 Oct 2023 12:05 AM GMT

மதுரையில் இருந்து சென்னைக்கு அடுத்தடுத்து 3 விமானங்கள் ரத்து.

மதுரை,

சென்னையில் இருந்து நேற்று மாலை 4.25 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய தனியார் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக செல்லவில்லை. இதனால் மதுரையில் இருந்து சென்னைக்கு 5 மணிக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுபோல் அந்த விமான நிறுவனத்தின் சார்பில் 7 மணிக்கு சென்னைக்கான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதுதவிர மதுரையில் இருந்து 9 மணிக்கு சென்னை செல்லும் மற்றொரு தனியார் விமானமும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அடுத்தடுத்து 3 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அந்த 3 விமானங்களில் முன்பதிவு செய்து விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்