< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
நெல்லை பணகுடி அருகே காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

4 Jun 2022 7:11 PM IST
நீண்ட நாட்களாக பயன்படுத்தாத காரில் விளையாடிய நித்திஷா (வயது 7), நித்திஷ் (வயது 5), கபிலன் (வயது 4) ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
நெல்லை,
நெல்லை பணகுடி லெப்பை குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட காருக்குள் விளையாட சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாக பயன்படுத்தாத காரில் விளையாடிய நித்திஷா (வயது 7), நித்திஷ் (வயது 5), கபிலன் (வயது 4) ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் பணகுடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து பணகுடி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.