< Back
மாநில செய்திகள்
முருக்கம்பட்டு ஊராட்சியில் வெறிநாய் கடித்து 3 குழந்தைகள் காயம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

முருக்கம்பட்டு ஊராட்சியில் வெறிநாய் கடித்து 3 குழந்தைகள் காயம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
3 July 2022 1:07 PM IST

முருக்கம்பட்டு ஊராட்சியில் வெறிநாய் கடித்து 3 குழந்தைகள் காயமடைந்தனர்.

திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றி திரிந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை சுற்றி திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், குழந்தைகளையும் விரட்டி சென்று கடித்துள்ளது.இதில் முருக்கம்பட்டு பகுதியை சேர்ந்த பாபு என்பவரது இரண்டு மகள்களான பிரணவி (வயது 7), அஷ்மிதா (5) மற்றும் மணி என்பவரது மகள் சார்விகா (3) ஆகிய 3 குழந்தைகள் காயமடைந்தனர்.

வெறிநாய் தாக்குதலுக்கு ஆளான மூன்று குழந்தைகளும், திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்து இரண்டு குழந்தைகள் வீடு திரும்பினர். பிரவிணா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பொதுமக்களையும், கால்நடைகளையும் கடித்து குதறி வரும் வெறி நாய்களை கட்டுபடுத்த முருக்கம்பட்டு ஊராட்சி நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்