< Back
மாநில செய்திகள்
மூங்கில்துறைப்பட்டில் கார் மோதி 3 குழந்தைகள் படுகாயம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மூங்கில்துறைப்பட்டில் கார் மோதி 3 குழந்தைகள் படுகாயம்

தினத்தந்தி
|
11 Jun 2022 9:49 PM IST

மூங்கில்துறைப்பட்டில் கார் மோதி 3 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டை சேர்ந்தவர் சவுரிராயன்(வயது 68). இவர் தனது உறவினர் செல்வராஜின் குழந்தைகளான ரோமியோ (13), அனார் (10), மடோனா (6) ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இளையாங்கண்ணி கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சங்கராபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குழந்தைகள் ரோமியோ, அனார், மடோனா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சவுரிராயன் காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்