< Back
மாநில செய்திகள்
கடற்கரையில் 3 கருங்கல் சிலைகள் கண்டெடுப்பு
கடலூர்
மாநில செய்திகள்

கடற்கரையில் 3 கருங்கல் சிலைகள் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
2 Sep 2023 6:45 PM GMT

பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையில் 3 கருங்கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே புதுக்குப்பம் மீனவர் கிராமத்தில் உள்ள கடற்கரையில் நேற்று காலை 10 மணி அளவில் கண்ணன், கருடா மற்றும் உடைந்த நிலையில் ஒரு சிலை என 3 சிலைகள் கரை ஒதுங்கி இருந்தது. இதை கடற்கரையோரம் நடந்து சென்ற மீனவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து மீனவ கிராம நிர்வாகத்திற்கும், பரங்கிப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீனவ கிராம நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் சிலைகளை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அந்த சிலைகள் எப்படி கடற்கரையோரம் வந்தது? என்ற விவரம் தெரியவில்லை.

இதையடுத்து, அந்த 3 சிலைகளையும் போலீசார் மீட்டு, புவனகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஓப்படைத்தனர். தொடர்ந்து சிலைகள் கடல் அலையில் அடித்து வந்து கரை ஒதுங்கப்பட்டதா? அல்லது யாரேனும் கடற்கரையில் போட்டு சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்