< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
|27 May 2022 6:00 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, போன்ற பல்வேறு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான காஞ்சீபுரம் மாவட்டம், கச்சிபட்டு கிராமத்தை சேர்ந்த மிதுன்சக்கரவர்த்தி (வயது 28), வெங்காடு கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (25), விழுப்புரம் மாவட்டம் பெம்பூர் கிராமத்தை சேர்ந்த பால (எ) பாலமுருகன் (29) ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் காவலில் வைக்க, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, மேற்கண்ட 3 பேரை ஓராண்டு குண்டர் சட்டத்தில் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.