காஞ்சிபுரம்
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
|படப்பை அருகே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஒரத்தூர் செல்லும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டது. இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். புகாரை தொடர்ந்து மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார் தலைமையிலான போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகியுள்ள காட்சியை வைத்து மோட்டார் சைக்கிள் திருடிய நபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் வட்டம்பாக்கம் நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 24), பார்த்திபன் (21), அரிஷ் என்கிற சாமி (19) என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில் மணிமங்கலம், ஒரகடம், கூடுவாஞ்சேரி வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது.
அதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்