< Back
மாநில செய்திகள்
கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருடிய வழக்கில் 3 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருடிய வழக்கில் 3 பேர் கைது

தினத்தந்தி
|
2 May 2023 8:19 AM IST

தாம்பரம் அருகே கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலையில் சுயம்புலிங்கம் என்பவர் குளிர்பான மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 27-ந்தேதி 2 மர்ம நபர்கள் குளிர்பானம் வாங்குவதற்காக வந்தனர். அவர்கள் கடைகாரர்களின் கவனத்தை திசைதிருப்பி கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்தை லாவகமாக எடுத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் அங்கு இருந்து தப்பினர். அதேபோல அருகில் உள்ள மற்றொரு ஹார்டுவேர்ஸ் கடையில் அதே நபர்கள் கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.1 லட்சத்தை திருடி சென்றனர்.

இரு சம்பவங்கள் குறித்தும் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து கடைகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரனை மேற்கொண்டனர். இதில் திருட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்த பிராட்வே பகுதியை சேர்ந்த சாயின்ஷா (வயது 30), சென்னை மாத்தூர் பகுதியை சேர்ந்த சாயின்ஷா (35), பெரம்பூர் பகுதியை சேர்ந்த அல்தாப் உசேன் (31) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து இதுபோன்று வேறு எதேனும் சம்பவங்களில் ஈடுபட்டனரா என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்