< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கஞ்சா கடத்திய 3 பேர் கைது
|5 Aug 2022 11:56 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் வழியாக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்படுவதாக கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த அருண் (24), சுனில்குமார் (20), சஞ்சய் (19) ஆகியோர் 300 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.