< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை - 3 பேர் கைது
|14 Jun 2022 3:26 PM IST
திசையன்விளையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதை தடுக்க, கடந்த ஒரு வார காலமாக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது உடன்குடி சாலை அருகே குளிர்பானம் விற்பது போல் மதுபானம் விற்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற ஜோசப், கணேசன் மற்றும் சுயம்பு ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.