< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
|1 Oct 2023 3:09 AM IST
மதுரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர் .
மதுரை கீரைத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிந்தாமணி ரெயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 28), கணேசன் (21), மார்க்கண்ட பூபதி (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.