< Back
மாநில செய்திகள்
போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது
மதுரை
மாநில செய்திகள்

போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
9 Jun 2022 1:50 AM IST

போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது

மதுரை,

மதுரை அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வண்டியூர் பகுதியில் உள்ள தியேட்டர் அருகே சந்தேகத்திற்கிடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த ஷாம் நிகிதன்(வயது 20), அண்ணாநகரை சேர்ந்த பாலசுப்பிரமணி(23), கிருஷ்ணமூர்த்தி(23) என்பது தெரியவந்தது. அவர்களிடம் சோதனை செய்ததில் விற்பனை செய்வதற்காக 400 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்