
காஞ்சிபுரம்
ஒரகடம் அருகே குட்கா பதுக்கிய 3 பேர் கைது

ஒரகடம் அருகே குட்கா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மொத்தமாகவும் சில்லறையாகவும் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக ஒரகடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் உள்ள கடை மற்றும் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 2 கடைகளில் குட்கா விற்பனை செய்து வந்ததும், ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஓரகடம் அண்ணா தெருவை சேர்ந்த செல்வம் (வயது 37), சிவன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (21), ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் (34) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் இவர்கள் குட்கா விற்பனையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 15 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.