< Back
தமிழக செய்திகள்

சிவகங்கை
தமிழக செய்திகள்
தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு 3 பேர் கைது

30 Jun 2023 12:30 AM IST
தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). தனியார் நிறுவன சர்வீஸ் என்ஜினீயர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிங்கம்புணரிக்கு தன்னுடைய நிறுவனம் தொடர்பான வேலைக்கு சென்று விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். சிவகங்கையை அடுத்த பெருமாள்பட்டி அருகே வந்த போது அங்கு நின்றிருந்த 3 வாலிபர்கள் விஜயகுமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி சக்கந்தி மில் கேட் பகுதி சேர்ந்த ஹரிஹரன் (19), பாலமுருகன் (19), சோழபுரத்தைச் சேர்ந்த நித்திஷ் ராஜ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.