< Back
மாநில செய்திகள்
வாலிபரை வெட்டிய 3 பேர் கைது...!
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

வாலிபரை வெட்டிய 3 பேர் கைது...!

தினத்தந்தி
|
17 Jun 2023 11:33 PM IST

ஆற்காடு அருகே வாலிபரை வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தை் சேர்ந்தவர் சத்திய குமார் (வயது 26). இவர் கடந்த 15-ந்் தேதி இரவு ஆற்காடு அடுத்த கத்தியவாடி கிராமத்தில் அரசு பஸ் நிற்காமல் சென்றதை தட்டி கேட்டதில் அதே கிராமத்தை சேர்ந்த அரவிந்தன், கார்த்தி, லோகேஸ்வரன், பூவரசன் ஆகியோருடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தகராறில் ஈடுபட்ட கத்தியவாடி கிராமத்தை சேர்ந்த 4 பேரும் இரண்டு மோட்டார் சைக்கிளில் ஆயிலம் கிராமத்திற்கு சென்று சத்தியகுமார் மற்றும் அவரது உறவினர் விஷ்வாவிடம் தகராறில் ஈடுபட்டு சத்திய குமாரை கத்தியால் வெட்டி, தடியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்ட சத்திய குமாரை ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து விஷ்வா ரத்தினகிரி போலீசில் அளித்த புகாரின் பேரில் கத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (22), லோகேஸ்வரன் (22), பூவரசன் (22) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்