< Back
மாநில செய்திகள்
உரிமம் இல்லாத துப்பாக்கி, 150 தோட்டாக்களுடன் காரில் வந்த 3 பேர் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

உரிமம் இல்லாத துப்பாக்கி, 150 தோட்டாக்களுடன் காரில் வந்த 3 பேர் கைது

தினத்தந்தி
|
27 April 2023 12:58 AM IST

கும்பகோணம் அருகே உரிமம் இல்லாத துப்பாக்கி, 150 தோட்டாக்களுடன் காரில் வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே உரிமம் இல்லாத துப்பாக்கி, 150 தோட்டாக்களுடன் காரில் வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் போலீசார் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலை 5 தலைப்பு வாய்க்காலில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டடு இருந்தனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த காரில் காரைக்கால் மாவட்டம் ஊழியபத்து பகுதியை சேர்ந்த பாலகுரு(வயது 50), மயிலாடுதுறை கல்லறை தோப்பு தெருவை சேர்ந்த எட்வின் லியோ(36), காரைக்கால் மாவட்டம் நிரவி புதுமனை தெருவை சேர்ந்த அப்துல்காதர்(36) ஆகிய 3 பேர் இருந்தனர்.

கைது-துப்பாக்கி பறிமுதல்

அவர்களிடம் போலீசார் சோதனை செய்தபோது உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் 150 தோட்டாக்கள் ஆகியவற்றை அவர்கள் வைத்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்