< Back
மாநில செய்திகள்
இரு தரப்பினர் இடையே தகராறு; 3 பேர் கைது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

இரு தரப்பினர் இடையே தகராறு; 3 பேர் கைது

தினத்தந்தி
|
29 March 2023 12:30 AM IST

இரு தரப்பினர் இடையே தகராறில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேதாரண்யம் விஸ்வநாதர்கோவில் தென்புற பகுதியில் வசிப்பவர் முருகானந்தம் (வயது32). இவர் சம்பவத்தன்று வேதாரண்யம் மேலவீதியில் உள்ள சுதாகர் என்பவருடைய பெட்டிக்கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து நடந்த தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் போரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து புரோட்டா மாஸ்டர் மணி (53), வ.உ.சி. நகரை சேர்ந்த கார்த்தி (29), வேதாரண்யம் நகா்புறம் அருண் (29) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்