< Back
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
10 Nov 2022 12:30 AM IST

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அசனுதீன் (வயது 54), திட்டச்சேரி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ரமேஷ் (36), திட்டச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த பகுருதீன் (42) ஆகிய 3 பேரும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசனுதீன், ரமேஷ், பகுருதீன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்