< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மது விற்ற 3 பேர் கைது
|17 Oct 2022 1:15 AM IST
மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரத்தநாடு சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலஉளூர் பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது41), தினேஷ் (27), நெய்வாசல் பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்த பூவாளூர் கிராமத்தை சேர்ந்த கபிலன் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 150 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.