< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

தினத்தந்தி
|
19 July 2022 10:42 PM IST

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகை பாப்பான் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நாகை வெளிப்பாளையம் பச்சைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிளாக்கன் (வயது31), மணி (36), வடக்கு நல்லியான்தோட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்