< Back
மாநில செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் 2-ம் கட்டமாக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்
அரியலூர்
மாநில செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் 2-ம் கட்டமாக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்

தினத்தந்தி
|
1 March 2023 6:45 PM GMT

ஜெயங்கொண்டத்தில் 2-ம் கட்டமாக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியுடன் கல்வி கற்பதை தவிர்க்கும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக சின்னவளையம், ஜெயங்கொண்டம் வடக்கு மற்றும் தெற்கு ஆதிதிராவிட நலப்பள்ளி, செங்குந்தபுரம் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 9 பள்ளிகளை சேர்ந்த 464 குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இத்திட்டத்தின் 2-ம் கட்டமாக ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து 76 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 540 குழந்தைகள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்