< Back
மாநில செய்திகள்
அரசு கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அரசு கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை

தினத்தந்தி
|
17 Jun 2023 12:15 AM IST

திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டு இளம் அறிவியல் மற்றும் இளங்கலை 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை வருகிற 19 மற்றும் 20-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி புத்தகம் அசல் மற்றும் 2 நகல், 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும். சேர்க்கைக்கான கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்தவர்களின் தர வரிசை பட்டியல் www.gasctvn.com.என்ற கல்லூரியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இக்கல்லூரிக்கு விண்ணப்பித்து இதுவரை கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களும் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் கல்லூரி முதல்வர் தமிழரசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்