கள்ளக்குறிச்சி
2 வது கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
|ரிஷிவந்தியம் அரசு கலை கல்லூரியில் 2 வது கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த மாதம் நடக்கிறது
ரிஷிவந்தியம்
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 1, 2 ஆகிய தேதிகளில் 2-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன்படி 1-ந் தேதி(வியாழக்கிழமை) பி.எஸ்.சி. கணினி அறிவியல், புள்ளியியல் மற்றும் பி.காம். ஆகிய துறைகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ-மாணவிகளும், 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பி.ஏ. தமிழ், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வு காலை 9.30 மணியளவில் தொடங்கும். இதில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் விண்ணப்ப நகல், அசல் மாற்றுச்சான்றிதழ், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், ஆதார்அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வரவேண்டும். சேர்க்கை பெறும் மாணவர்கள் உடனடியாக கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டும். கால தாமதமாக வருபவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.