< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
2-வது திருமணம் செய்த தாயை மீட்டுத்தர வேண்டும் - 15 வயது சிறுவன் புகார் மனு
|17 July 2024 12:05 AM IST
2-வது திருமணம் செய்த தாயை மீட்டுத்தர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 வயது சிறுவன் புகார் மனு அளித்துள்ளான்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் 10-ம் வகுப்பு படிக்கிறேன். எனது அம்மா- அப்பா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதனால் நான் பாட்டி வீட்டில் வசித்து வந்தேன். இந்த நிலையில் எனது அம்மா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். நான் அதை எனது அம்மாவிடம் தட்டிக் கேட்டேன். அதனால் என்னை அவர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
மேலும் எனது பாட்டி வீட்டிலும் என்னை சேர்க்கவில்லை. சேர்ந்து வாழ எனது தந்தை அழைத்தும் தாயார் வரவில்லை. எனக்கும், என் அப்பாவுக்கும் ஆதரவு இல்லை. இப்போது எங்கே செல்வது என எனக்கு தெரியவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது தாயை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.