< Back
மாநில செய்திகள்
முதல் மனைவி இருக்கும் போதே 2-வது திருமணம்
அரியலூர்
மாநில செய்திகள்

முதல் மனைவி இருக்கும் போதே 2-வது திருமணம்

தினத்தந்தி
|
24 Jun 2023 11:07 PM IST

ஜெயங்கொண்டம் அருகே முதல் மனைவி இருக்கும்போதே 2-வது திருமணம் செய்த லாரி டிரைவரையும், அவர் 2-வது திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

காதல்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி படநிலை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகைவேல்(வயது 27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா(27) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபிநயா(21) என்பவருக்கும், கார்த்திகைவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதல் மனைவிக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த முதல் மனைவி கவிதா, கணவர் கார்த்திகைவேலை கண்டித்துள்ளார். இந்நிலையில் அபிநயா சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல் சென்னையில் கார்த்திகைவேல் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கார்த்திகைவேல், அபிநயாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

2-வது திருமணம்

இதனால் ஆத்திரம் அடைந்த கவிதா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி கார்த்திகைவேல், அபிநயா ஆகிய இருவரையும் அழைத்து விசாரித்தார். இதையடுத்து முதல் மனைவி இருக்கும்போதே 2-வது திருமணம் செய்து கொண்ட கார்த்திகைவேல் மற்றும் அபிநயா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்