< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
2-வது நாள் தேடும் பணியிலும் கிடைக்கவில்லை
|14 Nov 2022 12:08 AM IST
கோமுகி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை 2-வது நாளாக தேடியும் கிடைக்கவில்லை.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி வ.உ.சி. 2-வது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் கரண்ராஜ்(வயது 22). இவர்தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மதியம் சோமண்டார்குடி கோமுகி ஆற்றில் மீன்பிடிக்க சென்றார். அப்போது ஆற்று வெள்ளத்தில் கரண்ராஜ் அடித்து செல்லப்பட்டார். அவரை , கச்சிராயப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. ஆனால், அப்போதும் கரண்ராஜ் கிடைக்வில்லை. தொடர்ந்து இன்றும் தேடும் பணி நடைபெற இருக்கிறது.