< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேசிடம் 2-வது நாளாக விசாரணை
|14 Dec 2023 1:11 AM IST
ஆருத்ரா கோல்டு நிறுவனம் பெயரில் ரூ.2,438 கோடி வரை சுருட்டி விட்டதாக 22 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
சென்னை,
ஆருத்ரா கோல்டு நிறுவனம் பெயரில் ரூ.2,438 கோடி வரை சுருட்டி விட்டதாக 22 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து அவர் நேற்று முன்தினம் அசோக்நகர் போலீஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து 2-வது நாளாக நேற்று மீண்டும் அவர் ஆஜர் ஆனார். மாலை 6.30 மணி வரை அவரிடம் விசாரணை நடைபெற்றது. போலீசார் கேட்ட சில முக்கியமான ஆவணங்களை அவர் விசாரணையின் போது சமர்ப்பித்தார். பின்னர் அவரை போலீசார் அனுப்பிவிட்டனர்.
அப்போது, போலீஸ் அனுமதி இல்லாமல் அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்றும், கூப்பிடும் போது ஆஜர் ஆக வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.