< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு  29-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

தினத்தந்தி
|
27 July 2024 10:21 AM IST

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகன் கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இங்கு ஆடி கிருத்திகையை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை வருகிற 29-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்